சுடச்சுட

    

    மேல்நிலை துணைத் தேர்வு: இணையத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு

    By DIN  |   Published on : 23rd September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்நிலை துணைத் தேர்வுக்கு  விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    நடைபெறவுள்ள மேல்நிலை துணைத் தேர்வுக்கு,  அரசுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, w‌w‌w.‌t‌n‌g‌dc.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    ‌w‌w‌w.‌t‌n‌g‌dc.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் DE​P​A​R​T​M​E​NT​ OF​ EX​A​M​I​N​A​T​I​ON​ என்ற வார்த்தையை கிளிக் செய்து, HSE​ S‌e‌p‌t‌e‌m​b‌e‌r​
    O​c‌t‌o​b‌e‌r​ 2016 Ha‌l‌l​ T‌i​c‌k‌e‌t​ D‌o‌w‌n‌l‌o​a‌d​
     என்ற இணைப்பைத் திறந்து, விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக் கிடைக்கும்.
    தனித் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை மேற்கண்ட முறையில், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai