Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 24th September 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் வகையில்,  அனைத்து ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி. சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்  அசோக்குமார் பங்கேற்று, மாநில பொதுக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். இதில் மாநில முன்னாள் செயலர் லீலாவதி, பொருளாளர் எம். சங்கர், மாவட்டப் பொறுப்பாளர்கள்  ஜெயபால், ஜோதிராம், யாசின், திலக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்பிக்கும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் அல்லது கணினி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai