Enable Javscript for better performance
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தில், தமிழக ஆசிரியர்  கூட்டணி வட்டார அமைப்பின் புதிய நிர்வாகிகள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    வேதாரண்யம் தமிழ்த் தென்றல் வளாகத்தில்  நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வுக்கு அமைப்பின் நாகை  மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்ட துணைச்  செயலர் அ. மதியரசு ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாகச் செயல்பட்டனர்.
    வட்டார முன்னாள் தலைவர் இரா. இந்திரசித்தன், மாவட்ட துணைத் தலைவர் ச. சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    புதிய வட்டாரத் தலைவர் - தி. செந்தில்நாதன், செயலர் - வை. ஜெயசீலன், பொருளாளர் - பா. ஆனந்த்முருகு, மகளிரணி செயலர் -  வி.க. கவிதா, துணைத் தலைவர் - ஆ. தமிழ்ச்செல்வன், துணைச் செயலர் - பா. சேகர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai