சுடச்சுட

    

    திருமருகல் அருகே சென்னைக்கு வேலை விஷயமாக சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
    சீயாத்தமங்கை, ஆற்றங்கரைத் தெருவில் வசிப்பவர் காமராஜ் (26). கடந்த ஏப்ரல் மாதத்தில் காமராஜுக்கு திருமணம் நடைபெற்றது.
    ஆக. 10 ஆம் தேதி சென்னைக்கு வேலை விஷயமாக செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு, காமராஜிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லையாம்.
    இதுகுறித்து காமராஜின் மனைவி விஜயசாந்தி அளித்த புகாரின் பேரில், திட்டச்சேரி  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai