Enable Javscript for better performance
கர்நாடக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 விவசாயிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 விவசாயிகள் கைது

    By DIN  |   Published on : 24th September 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    காவிரி கடைமடை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் தி. இளஞ்செழியன் தலைமையில், காவேரி நகர் பகுதியில் ஒன்றிணைந்த விவசாயிகள் பேரணியாகச் சென்று மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதைத்தொடர்ந்து, சென்னை - மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலை மறிக்க முயன்றனர். அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி 25 பேரை கைது செய்தனர்.
    இதில் விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பனசை. அரங்கன்,  காவிரி கடைமடை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கப் பொருளாளர் தங்கமணி,  துணைத் தலைவர் கே. சின்னதுரை, சீர்காழி வட்டப் பொறுப்பாளர் அபிமன்யு,  வழக்குரைஞர் செளந்தர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai