சுடச்சுட

    

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள்

    By DIN  |   Published on : 24th September 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில், தீ விபத்தில் வீடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
    சீர்காழி தென்பாதி காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது குடிசை வீடு செவ்வாய்க்கிழமை மாலை  ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.
    பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாய், போர்வைகள், அரிசி, மளிகை பொருள்கள், உடைகள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் சரவணன் தலைமையில்,  செயலர் வெங்கடாஜலபதி, நிர்வாகிகள் ஆசிரியர் வைத்தியநாதன், பாலமுருகன், மோகனசுந்தரம் உள்ளிட்டோர் வழங்கினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai