சுடச்சுட

  

  ஜன சங்கத்தைத் தோற்றுவித்த  தலைவர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின்  கொள்கை மற்றும் கோட்பாடுகளை உருவாக்கியவருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாள் விழா மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவர் மோடி. கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்  தலைவர் எம்.ஜி. பாலசுப்பிரமணியன், மாவட்ட  பொதுச் செயலர் நாஞ்சில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி, காமராஜர் சாலையில் உள்ள விஜயா வங்கிக் கிளை முன்பு பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
  தொடர்ந்து, பாரத பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வங்கிக்  கணக்கு தொடங்கப்பட்டது.
  இதில் நாகை மாவட்ட பாஜக தலைவர் ஜி. வெங்கடேசன், நகர பொதுச் செயலர் மயில் (எ)ரவி, மகளிர் அணியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai