Enable Javscript for better performance
பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல்: 44 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஒன்றிணைந்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொடர்ந்து, காமராஜர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்தனர்.
    நாகை மாவட்ட பாஜக தலைவர் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தார். கட்சியின் விவசாயப் பிரிவு மாநில துணைத் தலைவர் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில் பாலு, நகரத் தலைவர்  மோடி. கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில் இந்து முன்னணி தஞ்சை  கோட்டப் பொறுப்பாளர் நாராயணன், நாகை  மாவட்டச் செயலர் ராஜமோகன், நாகை மாவட்ட பாஜக செயலர் அகோரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜி. பாலசுப்பிரமணியன்,  வட்டப் பொருளாளர் முத்துக்குமாரசாமி, இளைஞர் அணி மாவட்டத் தலைவர் வினோத், நகர துணைத் தலைவர் குமார், திருக்கோயில், திருமடங்கள்  பாதுகாப்பு பேரவையின் மாநில அமைப்பாளர் அழகிரிசாமி, பாஜக வர்த்தகர்  அணி மாவட்ட நிர்வாகிள் ஆர். ஜெயக்குமார், மணிகண்டன் உள்ளிட்டோர் சாலை மறியலில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai