சுடச்சுட

    

    பெண் கல்வியை ஊக்குவிக்கவே திருமண உதவித் தொகைத் திட்டம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

    By DIN  |   Published on : 24th September 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண் கல்வியை ஊக்குவிக்கவே தமிழக அரசால் திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
    நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற, திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் அவர், மேலும் பேசியது:
    ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வி, வாழ்வாதார, பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துபவையாக உள்ளன.
    இதில், திருமண உதவித் தொகைத் திட்டம், பெண்களின் கல்வி இடைநிற்றலைத் தவிர்த்து, பெண் கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாக உள்ளது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
    இதைத் தொடர்ந்து, தலைஞாயிறு, வேதாரண்யம், கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருமருகல், கீழையூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 712 பயனாளிகளுக்கு ரூ. 2.77 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.
    மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் மனோகரனின் குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
    மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி, வீ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், நாகை நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai