Enable Javscript for better performance
மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2.40 லட்சம் மோசடி: பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாக ரூ. 2.40 லட்சம் மோசடி: பெண் கைது

    By DIN  |   Published on : 24th September 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 2.40 லட்சம் மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள புதுத்துறை கிராமத்தில் சோழன், அன்னை, ரோஜா, ஜான்சிராணி, முல்லை உள்ளிட்ட 10 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    இந்த குழுக்களைச் சேர்ந்த ஊக்குநர்கள் மற்றும் உறுப்பினர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த, விநாயகக்குடி கிராமத்தைச் சேர்ந்த ந. சகுந்தலா, சீர்காழி கோவிலான் தெருவைச் சேர்ந்த அ. சந்திரா ஆகிய இருவரும், சீர்காழி பிடாரி மேல வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட  வங்கியில் குழுவுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கடன் பெற்று தருவதாகக் கூறினராம். இதற்காக 10 குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் தலா ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.40 லட்சத்தை பெற்றுக்கொண்டு காலம் கடத்தினாராம். இதனால், சந்தேகமடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதற்கு  சகுந்தலா, சந்திரா ஆகிய இருவரும் மகளிர் குழுவினரை தரக்குறைவாகத் திட்டி, மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த நெ. சுகந்தி (37) அளித்த புகாரின்பேரில், சீர்காழி காவல் ஆய்வாளர் அழகுதுரை வழக்குப் பதிந்து, சகுந்தலாவை கைது செய்தார். சந்திராவை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai