சுடச்சுட

  

  மண்டல பூப்பந்தாட்டப் போட்டி: ஏவிசி பொறியியல் கல்லூரி முதலிடம்

  By DIN  |   Published on : 24th September 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணா பல்கலைக்கழக  கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும்  பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்டப் போட்டிகள் மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில்  நடைபெற்றன.
  மண்டல அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 8 பொறியியல் கல்லூரிகளைச்  சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில்   மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி  மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர்.
  போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு  கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்  ராஜசேகரன், பதக்கம், சான்றிதழ்களை  வழங்கினார்.
  முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் கே. கார்த்திகேயன்,  ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஞானசுந்தர், முதல்வர் பாலசுப்பிரமணியன், நிர்வாக இயக்குநர் செந்தில்முருகன், கல்லூரி  முதன்மையர்கள் விஜயராஜ், பிரதீப்,  உடற்கல்வி ஆலோசகர் பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநர்கள் முத்துக்குமரன்,  விவேகானந்தன் உள்ளிட்டோர் வாழ்த்துத்  தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai