சுடச்சுட

    

    சீர்காழி அருகே வெள்ளிக்கிழமை இரவு வெறிநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    நந்தியநல்லூரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (75), கிருஷ்ணம்மாள் (80). இருவரும் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தங்கள் வீடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
    அப்போது அங்கு வந்த வெறிநாய் அவர்களை துரத்திச் சென்று கடித்தது. அவர்களை கடித்த வெறிநாய், நிம்மேலி கிராமத்துக்குச் சென்று அங்கு போர்செட்டில் குளித்துக் கொண்டிருந்த புவனேஷ்வரன் (15) என்பவர் கையை கடித்தது. மேலும் அகனி, நிம்மேலி பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்துவிட்டுச்  சென்றது.
    இதையடுத்து காயமடைந்த அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பலத்த காயமடைந்த காசியம்மாள், கிருஷ்ணம்மாள், புவனேஷ்வரன் ஆகியோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரை சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி உள்ளிட்டோர்  சந்தித்து ஆறுதல் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai