Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு
    வருகிறது.
    சீர்காழி தென்பாதி மாரிமுத்து நகரைச் சேர்ந்தவர் ஜெ. சாமிநாதன் (42). இவர் இந்து மக்கள் கட்சி தஞ்சை மண்டல அமைப்பாளராக உள்ளார். கோவையில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக்
    கூறப்படுகிறது.
    அதன்படி, சீர்காழியைச் சேர்ந்த சாமிநாதனுக்கு துப்பாக்கியுடன் கூடிய அதிரடி படையைச் சேர்ந்த 2 காவலர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai