சுடச்சுட

    

    நன்னிலத்தில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது.
    நன்னிலம், வலங்கைமான், குடவாசல் எரிவாயு விநியோகஸ்தர்கள் முகமை சார்பில் பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயுசிலிண்டர் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ராஜரெத்தினம் திட்ட விளக்கவுரை ஆற்றினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால் இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கி பேசினார். வாடிக்கையாளர் சேவை மைய உதவி மேலாளர் பத்மா வரவேற்றுப் பேசினார். நன்னிலம் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் நம்மாழ்வார் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai