சுடச்சுட

  

  காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க விவசாயத்துறை வல்லுநர்களை அனுப்ப வேண்டும்: காவிரி எஸ்.ரெங்கநாதன் கோரிக்கை

  By DIN  |   Published on : 25th September 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தைச் சேர்ந்த விவசாயத் துறை வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் அடங்கிய குழுவினர், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
  மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
  உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு, அம்மாநில சட்டப் பேரவையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தண்ணீர் திறக்க மறுத்து, தீர்மானம் நிறைவேற்றியிருப்பது சட்ட விரோதமான காரியம். சட்டங்களை உருவாக்கும் அவையே சட்ட மீறல் காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று, முல்லைப்பெரியாறு பிரச்னையில் சட்ட மீறலில் ஈடுபட்ட கேரள அரசு, உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை காட்டிய பிறகுதான் பின் வாங்கியது. அதேபோன்ற நிலை கர்நாடக அரசுக்கு ஏற்படும்.
  காவிரி மேலாண்மை வாரியம் என்பது நீரினை பகிர்ந்து அளிப்பதுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விவசாய உற்பத்தி பெருக்கம், விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை எடுத்து கூறும் அமைப்பாகும்.
  காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து முறையிடுவதை விட, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயத் துறை வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் அடங்கிய குழுவை தமிழக முதல்வர் ஏற்படுத்தி, அக்குழுவினர் தமிழக அரசின் சார்பில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பிரதமரிடம் முழுமையாக விளக்குவார்கள் என்பதால், இப்பிரச்னையில் பிரதமர் நியாயமான முடிவு எடுக்க வழி ஏற்படும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai