சுடச்சுட

    

    சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர்கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்குள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    ஏற்பாடுகளை சிவதுர்க்கை வார வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். இதேபோல், இக்கோயிலில் தெற்கு கோபுர வாசல் அருகே தனி சன்னிதியில் அஷ்ட பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கு தேய்ப்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    முன்னதாக, சுக்ர விநாயகர், சுக்ர லிங்கத்துக்கு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai