சுடச்சுட

  

  நன்னிலம் ஒன்றிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

  By DIN  |   Published on : 25th September 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நன்னிலம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு போட்டியிட இட ஒதுக்கீடு பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
  அதன்படி, ஆலங்குடி, கீரனுர், கொட்டூர், மகிழஞ்சேரி, நாடாகுடி, போழக்குடி, சிறுவளூர், வீதிவிடங்கன் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  அகரத்திருமாளம், கொல்லாபுரம், மகாராஜபுரம், முடிகொண்டான், மூலங்குடி, பண்டாரவாடை, செம்பியநல்லூர், திருக்கண்டீஸ்வரம், வடகுடி ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  அச்சுதமங்கலம், கடகம், காளியாகுடி, கோயில் திருமாளம், குருங்குளம், மேனாங்குடி, பனங்குடி, பாவட்டக்குடி, ரெட்டக்குடி, சலிப்பேரி, சேங்கனூர், ஸ்ரீவாஞ்சியம், தலையூர், திருக்கொட்டாரம், வாழ்க்கை, விசலூர் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி பொது பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்
  பட்டுள்ளன.
  ஆனைக்குப்பம், கடுவங்குடி, கீழ்க்குடி, கொத்தவாசல், குவளைக்கால், மூலங்குடி, பருத்தியூர், பில்லூர், சிறுபுலியூர், சொரக்குடி, தட்டாத்திமூலை, திருமீயச்சூர், உபயவேதாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai