சுடச்சுட

    

    நாகூர் கடற்கரை மேம்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 25th September 2016 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகூர் கடற்கரை மேம்பாட்டுப் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.
    நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாகூர் கடற்கரை மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
    நாகூர் கடற்கரை மேம்பாட்டுக்கான பணிகளில், உடனடியாக செய்யக் கூடிய பணிகள், நீண்ட கால பணிகள் என வகைப்படுத்தி திட்டமிட்டுப் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. மேம்பாட்டுப் பணிகள் அனைத்தையும் அரசே நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்காமல், அனைத்துத் தரப்பினரும் இந்தப் பணிகளில் பங்கேற்க ஆர்வம் காட்ட வேண்டும்.
    நாகூர் கடற்கரை மேம்பாடு குறித்த ஆலோசனை வழங்குவதற்கான கமிட்டி அடுத்தக் கூட்டத்தில் அமைக்கப்படும். ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்துத் திட்டமிட்டு, நாகூர் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படும் என்றார் ஆட்சியர்.
    நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கோ. ராமமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பு, நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகராட்சி ஆணையர் ஜான்சன், நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.ஏ. ஷேக் அசன் சாகிபு, தர்கா ஆலோசனைக் குழுத் தலைவர் செய்யது முகமது கலிபா சாகிபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai