Enable Javscript for better performance
புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை: நாகை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை: நாகை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 25th September 2016 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை என்றாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பெருமாள் வழிபாடு, சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி, வளமான வாழ்வு அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
    இதன்படி, நாகை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை நாளான செப். 17-ஆம் தேதி ரத்தின அங்கி சேவை நடைபெற்றது.
    புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, சந்தனக்காப்பு சேவை நடைபெற்றது.
    மாலை 5 மணிக்கு மூலவர் மற்றும் உத்ஸவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.
    இதைத் தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் கண்ணாடி மாளிகையில் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai