Enable Javscript for better performance
வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி 12 பவுன் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி 12 பவுன் நகைப் பறிப்பு

    By DIN  |   Published on : 25th September 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர்.
    செம்பனார்கோயில் அருகேயுள்ள வடகரை, மதரசா தெருவைச் சேர்ந்தவர் சகிதாநாச்சியா (45). இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மகள் மற்றும் பேத்தியுடன் வீட்டில் இருந்தாராம்.
    அப்போது, வீட்டினுள் புகுந்த 5 மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை பறித்துக்கொண்டதுடன், மூவரையும் ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இவர்களது அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் வீட்டினர் வந்து 3 பேரையும் மீட்டனர்.
    தகவலறிந்த செம்பனார்கோயில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai