சுடச்சுட

    

    வேதாரண்யத்தை அடுத்த நாககுடையான் கிராமத்தில் 205 விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
    நாககுடையான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 205 விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தனர். தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெற்ற ரூ. 40.72 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ராசேந்திரன் தலைமை வகித்தார். செயலர் செல்லதுரை முன்னிலை வகித்தார்.
    ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சண்முகராஜ், ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர். கிரிதரன், நமசிவாயம், சிவானந்தம், நிர்வாகி பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளியான மதியழகனுக்கு 3 சக்கர சைக்கிள் இலவசமாக அளிக்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai