சுடச்சுட

    

    கத்திரிப்புலத்தில் மருத்துவ முகாம்: 1,026 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 26th September 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யத்தை அடுத்த கத்திரிப்புலம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 1,026 பேர் பங்கேற்றனர்.
    அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், இருதய நோய், நீரிழிவு நோய், முதியோருக்குத் தேவையான  மருத்துவப் பரிசோதனைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான  சிறப்பு சிகிச்சைகள் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
    முகாமுக்கு, நோய்த் தடுப்புத்துறை அலுவலர் லியாக்கத் அலி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சாந்தகுமாரி, மாவட்ட மக்கள் கல்வி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுசீலாதேவி  சரவணன், இணை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்  சண்முகராஜ், ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர். கிரிதரன், நமசிவாயம், ஊராட்சித் தலைவர் ராஜலெட்சுமி வீரமணி,  வழக்குரைஞர் காசிநாதபாரதி, நிர்வாகி பசுபதி, கூட்டுறவு சங்கத் தலைவர் அபிமன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai