சுடச்சுட

    

    சம்பா சாகுபடிக்கு பாசன நீர் பங்கீடு: கீழ்வேளூரில் ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 26th September 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரை சம்பா சாகுபடிக்கு எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கீழ்வேளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் ஜி.முருகானந்தம், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில், தண்ணீர் எளிதில் கடைமடையை எட்டுவதற்கு வசதியாக ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும், நீர்நிலைகளில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்கு செடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.  பின்னர், இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி பேசுகையில், "நடப்பு சம்பா பருவத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
    பெறப்படும் நீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், முறை வைத்து நீரை வழங்கும்போது, விவசாயப் பணிகள் நடைபெறும் பகுதிகளை கணக்கில் கொண்டு எந்தப் பகுதிகளுக்கு அதிகமாக நீரை வழங்குவது, எந்தப் பகுதிக்கு தேவைக்கேற்ப வழங்குவது என்பது குறித்தும் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
    அதேபோல், குளங்களை தூர்வாரித் தரவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பட்டியல் அளித்தால், அதற்கேற்ப தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அந்தக் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்'
    என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai