சுடச்சுட

  

  சாக்கடை வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க பாஜக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 26th September 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழியில் சாக்கடை வடிகால்  கட்டும் பணி மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து பாஜக மாநில இளைஞரணி  செயலர் கே. சரண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  சீர்காழி நகராட்சி 9-ஆவது வார்டு பிடாரி வடக்கு வீதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை வடிகால் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக சாலையில் பள்ளம் வெட்டப்பட்டு இதுவரை 20 நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், பணிகள் துரிதமாக நடைபெறவில்லை. வடிகால் கட்டும் பணிக்காக சாலையில் ஜல்லிக்கற்கள், மணல் கொடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும்  அவதியடைந்து வருகின்றனர்.
  பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையோரம் பள் ளம் வெட்டப்பட்டுள்ளதால் வியாபாரம் பாதிப்படைந்துவிட்டதாக வர்த்தகர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர், சீர்காழி பகுதியில் நேரடி ஆய்வு செய்து சாக்கடை வடிகால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai