சுடச்சுட

    

    செம்பனார்கோயில் அருகே இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
    மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குள்பட்ட அவையம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி மகன் சுகுமார் (28). கொத்தனார் வேலைப் பார்த்து வந்த இவர், கட்டுமானப் பணிக்காக காரைக்காலுக்கு சனிக்கிழமை சென்றார். அங்கு பணியை முடித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிவந்துகொண்டிருந்தபோது, செம்பனார்கோயில்- சங்கரன்பந்தல் சாலை, மேமாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில், சுகுமார் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    இந்த விபத்து குறித்து செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai