சுடச்சுட

    

    சீர்காழியில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த கூடுதலாக காவலர்களை நியமிக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 26th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த  கூடுதலாக போக்குவரத்து காவலர்களை  நியமிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி நகர எல்லை பகுதி தொடக்கமான தென்பாதி உப்பனாற்று பாலம் பகுதியிலிருந்து கொள்ளிடமுக்கூட்டு வரை உள்ள சாலைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள், வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்நிலைக் கருவூலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுமின்றி, பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகப் பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்குச் செல்வோர், பேருந்து நிலையத்துக்கு செல்வோர் என மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
    இதைக் கட்டுப்படுத்துவதற்கு, வாகனப் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் சீர்காழியில் போக்குவரத்து காவல் துறையில் போதிய காவலர்கள் இல்லை. ஒரு காவல் உதவி ஆய்வாளர், 6 போக்குவரத்து காவலர்கள் இருக்கவேண்டிய நிலையில், தற்போது 2 காவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடம் கடந்த 4 மாதங்களாக காலியாக இருப்பதால் போக்குவரத்தை சீரமைப்பதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரங்களில் சீர்காழி கடைவீதி, மருத்துவமனைச் சாலை, தென்பாதி, கச்சேரி சாலை, பழைய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளைக் கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஓரளவுக்கு காலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து சிறிது குறைந்துள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பதற்குள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீர்காழியில் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக காலியாக உள்ள போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்புவதுடன், கூடுதல் காவலர்களையும் நியமிக்கவேண்டும்.
    இதேபோல், சீர்காழியில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நகரில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த அவசர போலீஸ் 100 என்ற வாகனத்தை மீண்டும் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai