சுடச்சுட

  

  சீர்காழி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாமகவினர்  விருப்ப மனு அளிப்பு

  By DIN  |   Published on : 26th September 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து அக்கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
  சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி நாகை வடக்கு மாவட்ட தலைவர் லண்டன்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் அய்யப்பன் பங்கேற்று விருப்ப மனுக்களைப் பெற்றார். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், நகரச் செயலாளர் சரவணன், நகராட்சி கவுன்சிலர் நவநீதன் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து திங்கள்கிழமை (செப்.26) வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai