சுடச்சுட

    

    திருமருகல் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.47 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

    By DIN  |   Published on : 26th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமருகல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத் தலைவரும், கடன் சங்கத்தின் தலைவருமான ராதாகிருஷ்ணன் பங்கேற்று, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கிப் பேசுகையில், "இந்த கடன் சங்கத்தில் 438 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 1,46,92,000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் திருமருகல் ஒன்றியத்தில் அதிகமான விவசாயிகள் இந்த கடன் சங்கத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் செயலர் நல்லமுத்து, எழுத்தர் துரைசாமி, இயக்குநர்கள் ரகுபதி, பெரியமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai