சுடச்சுட

  

  நாகப்பட்டினத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர் இரா.பாலு. இவருக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் செப்.5 ஆம் தேதி வழங்கப்பட்டது.
  இதையொட்டி, தலைமை ஆசிரியர் இரா.பாலுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை வட்டாரம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகை வட்டாரத் தலைவர் அ.அந்தோணிராஜ் தலைமை வகித்தார். சர்ஐசக் நியூட்டன் கல்லூரி குழுமங்களின் தாளாளர் த.ஆனந்த், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் எம்.காந்தி, மாவட்டப் பொருளாளர் தெ.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ச.மோசஸ் பங்கேற்று, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பாலு மற்றும் பணி நிறைவுபெற்ற மஞ்சக்கொல்லை குமரன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.மகாலிங்கம் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்திப் பேசினார்.
  இதில் மாநில துணைத் தலைவர் சித்ரா, மாநில முன்னாள் செயலர் வீ.பாலசுப்ரமணியன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.ஆர். சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக வட்டாரச் செயலர் நா.எழிலரசன் வரவேற்றார். வட்டாரப் பொருளாளர் எஸ். அரியநாயகம் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai