சுடச்சுட

  

  நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் உள்ள மூன்று கடைகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  நீடாமங்கலம் -தஞ்சை சாலையில் வசிப்பவர் முகமதுஅப்துல்காதர்(55). இவர் தனது வீட்டின் பகுதியிலேயே மளிகைக்கடையை நடத்திவருகிறார். இவர் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
  ஞாயிற்றுக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கதவில் இருந்த இரண்டு பூட்டுகளைக் காணவில்லை. உடனடியாக நீடாமங்கலம் போலீஸாருக்கு தகவல் தந்தார்.
  இவரது கடையின் அருகில் காமராஜர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் (53) சைக்கிள் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகில்  புதுத்தெருவில் வசிக்கும் திருப்பதி (32) பர்னீச்சர் கடையை நடத்தி வருகிறார்.
  இவர்களது கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் அறிவழகன், உதவி ஆய்வாளர் விஜயராணி,திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு தலைமைக் காவலர் கமலநாதன்  மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்தினர். அப்பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
  பர்னீச்சர் கடையின் வெளியில் இருந்த கண்காணிப்புக் கேமராவை உடைத்து திருப்பி வைத்த கொள்ளையர் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து கையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்துடன் பர்னீச்சர் கடையின் உள்ளே நுழைந்து பணம் வைக்கும் பெட்டியிலிருந்து பணம் எடுப்பது பதிவாகியுள்ளது. மளிகைக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சைக்கிள் கடையில் மதுபுட்டி, பர்னீச்சர் கடையில் 6 ஆயிரம்  ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
  விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai