சுடச்சுட

    

    சீர்காழி நகர பாஜக நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கட்சியின் நகரத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, உமாமகேஸ்வரி, சுபிதா, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
    கூட்டத்தில், பாஜக நிறுவனத் தலைவர் தீனதயாள்உபத்யாயாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது; நரேந்திமோடி அரசின் சாதனைகளை விளக்கி வீடுகள் தோறும் துண்டுப்பிரசுரங்கள் வழங்குவது; இந்து தலைவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகர நிர்வாகிகள் வெத்தலை.முருகன், முருகேசன், ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai