சுடச்சுட

  

  மக்களவைத் தொகுதி வாரியாக மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 26th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தொகுதி வாரியாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என  மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாகை மாவட்ட பாஜக இளைஞரணி  செயல் வீரர்கள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
  கூட்டத்துக்கு இளைஞரணியின் நாகை மாவட்டத் தலைவர் கே.வினோத் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மாரி.சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் கே.சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் காசிராமன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பொன்.பாலகணபதி, கோட்ட அமைப்புச் செயலாளர்  கே.அய்யாரப்பன், கோட்டப் பொறுப்பாளர் தங்க.வரதராஜன், நாகை மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேசன், பொதுச் செயலாளர்கள் நாஞசில்.பாலு, அமிர்த விஜயகுமார்,விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்  கோவி.சேதுராமன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ராம.செந்தில்குமார், மகளிர் அணி மாநிலப் பொறுப்பாளர் முத்துலெட்சுமி ஆகியோர் பேசினர்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  மயிலாடுதுறையில் பொது விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும். அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி சேந்தங்குடி பகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்கவேண்டும். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இளைஞரணி மாவட்டப் பொதுச் செயலாளர்கள் பி.பாரதிகண்ணன், ஏ.எழிலரசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் டி.மணிகண்டன், சதீஷ்குமார், ஹீரோ.வினோத், மாவட்டச் செயலாளர்கள் ராமச்சந்திரன், ஆர்.கோபாலகிருஷ்ணன்,ஜி.கணேஷ், எஸ்.பார்த்தீபன், மாவட்டப் பொருளாளர் எம்.ராம்பிரசாத் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai