சுடச்சுட

    

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த முதியவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி அருகே லால்குடி, விழுதியூர், சந்தியாகப்பர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சவரி ஆனந்தம் (75). இவர் தனது உறவினர்களுடன் செப்.3-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர், 24-ஆம் தேதி அனைவரும் ஊருக்கு புறப்பட தயாரான நிலையில், சவரி ஆனந்தம்  காணாமல் போனது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
    இதையடுத்து, அவரது உறவினர் ராஜ் நோபிகி அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai