Enable Javscript for better performance
விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை  நடைபெற்றது.
    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு மற்றும் ஆசிரியர் அலுவலர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.சி.பாலு தலைமை வகித்தார்.
    ஒன்றியக்குழுத் தலைவர் தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் எம்.ரவிச்சந்திரனை  பாராட்டி பேசினார்.
    நிகழ்ச்சியில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஏ.பிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலாளர் ஜெயபாலகிருஷ்ணன், ரோட்டரி, லயன்ஸ் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ஆசிரியர் கழக செயலர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai