சுடச்சுட

    

    விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 26th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.சபரிநாதன் முதலிடம் பிடித்து, தங்கக்கோப்பையை வென்றார். அதேபோல், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இறகுபந்து போட்டியில் மாணவர்கள் எம். சுரேந்தர், எஸ்.சந்தோஷ்குமார், வீ.ரகுபதி, சி.டி. வெங்கடேஸ்வரன், ஆர்.விமல்ராஜ் ஆகியோர் திருச்சி மண்டல அளவில் 4-ஆம் இடம் பெற்றனர்.
    வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரிச் செயலர் பரமேஸ்வரன், இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், முதல்வர் நடராஜன், துணை முதல்வர்கள், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai