சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக வெண்டை விதை விநியோகம்

    By DIN  |   Published on : 26th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வானதிராஜபுரத்தில், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக வெண்டை விதைகள் வழங்கப்பட்டன.
    தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மூலம் இந்த விதைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
    தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நீர்ப்பாசனத் திட்டம், சொட்டு நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், இத்திட்டத்தில் 100 சதவீத மானிய சலுகைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும்படி தோட்டக்கலைத் துணை அலுவலர் முருகரசு கூறினார்.
    இதில் உதவித் தோட்டக்கலை அலுவலர்கள் செந்தமிழ்ச்செல்வன், நீதிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai