உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published on : 27th September 2016 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் சு. பழனிசாமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகை, இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி, ஏ.டி.எம். மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அவர் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அமைக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் ஆட்சியர்.
பின்னர், நாகை ஊராட்சி ஒன்றியம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூர், திட்டச்சேரி ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியிலும், நாகை நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியிலும் நடைபெறும் என்றார் ஆட்சியர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, நாகை வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செளந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.