சுடச்சுட

  

  கீழபெரும்பள்ளம் கேது கோயிலில் மத்திய இணை அமைச்சர் சுவாமி தரிசனம்

  By DIN  |   Published on : 27th September 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழியை அடுத்த கீழபெரும்பள்ளத்தில் உள்ள கேது பகவான் கோயிலில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
  கீழபெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு தனி சன்னிதியில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் அருள்பாலிக்கிறார்.
  இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி பிரச்னையில் இரு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நல்லதொரு முடிவை எடுப்பார்.
  தமிழகத்தில் இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது என்றார். தொடர்ந்து, அவர் திருவெண்காடு புதன்பகவான் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.  மாவட்ட பாஐக தலைவர் ஜி.வெங்கடேசன், கோயில் நிர்வாக அலுவலர் முருகையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai