Enable Javscript for better performance
சவுக்கு மரங்களுக்கு அரசு விலை நிர்ணயிக்கக் கோரி முதல்வருக்கு மனு- Dinamani

சுடச்சுட

    

    சவுக்கு மரங்களுக்கு அரசு விலை நிர்ணயிக்கக் கோரி முதல்வருக்கு மனு

    By DIN  |   Published on : 27th September 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சவுக்கு மரங்களுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யவும், அதை அரசு சார்ந்த காகித ஆலைகளுக்கு கொள்முதல் செய்யவும் தமிக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நாகை மாவட்ட திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் வாய்மேடு எல்.எஸ்.இ. பழனியப்பன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
    வேதாரண்யம் பகுதியில் சவுக்கு மரங்களை வளர்ப்பது பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்ட பிறகு கடைமடை பகுதியான வேதாரண்யத்தில் நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வயல்களில் சவுக்கு மரங்கள் பிரதான சாகுபடியாகச் செய்யப்படுகிறது. இந்த மரங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வளர்ந்த பிறகே அறுவடை செய்யப்படுகிறது. சாகுபடி பருவத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரையில் செலவாகிறது. அறுவடை நேரத்தில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டால் மரங்கள் ஈரத்தன்மையை இழந்து பட்டுப்போகிறது. இதனால், தனியார் முகவர்கள் மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
    நெல், கரும்புக்கு அரசே விலை நிர்ணயம் செய்வதைப்போல, சவுக்கு மரத்துக்கும் டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், அந்த மரங்களை காகித ஆலைகளுக்கு அரசே கொள்முதல் செய்யவும், இயற்கை இடர்பாடு காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யவும் சவுக்கு மரங்களுக்கான  காப்பீடுத் திட்டத்தை கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai