சுடச்சுட

  

  தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 27th September 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகப்பட்டினத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  நாகை ஒன்றியம் பாலையூர், ஐவநல்லூர் ஊராட்சிகளில் 3 மாதங்களாக வழங்கப்படாத 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்த ஊதியம் ரூ. 203-ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு நாகை ஒன்றியச் செயலர் கோ. பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் வி. சரபோஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai