சுடச்சுட

  

  நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இனசுழற்சி ஒதுக்கீடுகள்: தலைவர் பதவிகளில் பெண்கள் பெரும்பான்மை

  By DIN  |   Published on : 27th September 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இனசுழற்சி ஒதுக்கீடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாவட்ட ஊராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளில் பெண்கள் பெரும்பான்மை பெற்றுள்ளனர்.
  நாகை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பொது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஏ.கே. சந்திரசேகரன் மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, இந்தப் பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெண் - பொது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  ஊராட்சி ஒன்றியங்கள்...
  நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு விவரம் (ஊராட்சி ஒன்றியத் தலைவர்-  ஒதுக்கீடு):
  நாகப்பட்டினம் -  பெண் (எஸ்.சி). செம்பனார்கோயில் -  பெண் (எஸ்.சி). வேதாரண்யம்: பொது (எஸ்.சி). குத்தாலம்: பொது (எஸ்.சி). கீழ்வேளூர் - பெண் (பொது). தலைஞாயிறு - பெண் (பொது). மயிலாடுதுறை - பெண் (பொது). சீர்காழி - பெண் (பொது). கீழையூர் - பொது. திருமருகல் - பொது. கொள்ளிடம் - பொது.
  நகராட்சிகள்...
  நாகை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளின் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், சீர்காழி நகராட்சித் தலைவர் பதவி எஸ்.சி- பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 3 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண் - பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  பேரூராட்சிகள்...
  மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சித் தலைவர் பதவி மட்டும் பொது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  தரங்கம்பாடி, வேளாங்கண்ணி, திட்டச்சேரி, குத்தாலம் ஆகிய பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான ஒதுக்கீடு - பெண் (பொது). மணல்மேடு, தலைஞாயிறு, கீழ்வேளூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான ஒதுக்கீடு - பெண் (எஸ்.சி).
  தலைவர் பதவியில் பெரும்பான்மை
  நாகை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பொறுப்புகளைப் பொருத்தவரை பெண்களே பெரும்பான்மைப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில், 5 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்களும், ஒரு பேரூராட்சித் தலைவர் பதவியிடமும் மட்டுமே பொது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  மாவட்ட ஊராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர் உள்பட 18 தலைவர் பதவியிடங்கள் (ஊராட்சிகள் நீங்கலாக) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai