Enable Javscript for better performance
மண் எடுப்பதைத் தடுத்தவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருமருகல் அருகே மினி லாரியில் மண் எடுக்க வந்ததைத் தடுத்தவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    திருமருகல் அருகேயுள்ள அம்பல், பொறக்குடி, தேவாதி நல்லூரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (38). தரண்யாபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ். சத்தியராஜ் அரசலாற்றில் மண் எடுக்க மினி லாரியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தாராம். அவரை ஆசைத்தம்பி தடுத்து திருப்பி அனுப்பினாராம்.
    அங்கிருந்து சென்ற சத்தியராஜ், மேலும் இருவரை அழைத்து வந்து ஆசைத்தம்பியை தாக்கி, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றாராம். மேலும், ஆசைத்தம்பியின் சகோதரர் மாரிமுத்துவையும் அவர்கள் தாக்கினார்களாம். இதில் காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்த புகாரின்பேரில், திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து சத்தியராஜ், தன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai