சுடச்சுட

  

  மனித நேய ஜனநாயகக் கட்சியின் நாகை வடக்கு மாவட்டம் சார்பில், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர்  என்.எம். மாலிக் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள்  எம். அபுசாலி, மாவட்டப் பொருளாளர் ஆக்கூர்  ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலரும், நாகை  சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி பேசியது:
  மனித நேய ஜனநாயகக் கட்சி என்பது சிறுபான்மையின மக்களுக்கான அரசியல் கட்சி மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான கட்சி என்பதால்  பெரும்பான்மையின மக்களின் உணர்வுகளுக்கும்,  உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும் என்றார். கட்சியின் மாநில அவைத் தலைவர் எஸ்.எஸ். நாசர் உமரி, மாநில செயலர் எச். ராசுதீன் ஆகியோர் பேசினர். இதில் மயிலாடுதுறை ஒன்றியச் செயலர் எம். முஹம்மது ஜெப்ருதீன், நகர இளைஞரணி செயலர் எம். ரியாஸ்  அஹமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  நகரச் செயலர் ஏ.டி. முஹம்மது யாசர் அராபத் வரவேற்றார். இளைஞரணி நாகை வடக்கு மாவட்டச் செயலர் எம்.எஸ். மிஸ்பா நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai