சுடச்சுட

    

    மயிலாடுதுறை நகரில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதன்கிழமை (செப். 28) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
    மயிலாடுதுறை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பி. சுபாநந்தினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில், மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கலிதீர்த்தன், காவல் ஆய்வாளர் மகாதேவன், வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர். அசோக் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
    கூட்டத்தில், போக்குவரத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் வணிகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. தொடர்ந்து, தரங்கம்பாடி சாலையிலிருந்து  பட்டமங்கலத்தெருவில் நுழையும் அனைத்து வாகனங்களும் கச்சேரி சாலை வழியாகச் செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் அனைத்தும் பட்டமங்கலத்தெரு, கிளை சிறை வழியாகச் சென்று அதன் வழித்தடத்தை சென்றடைய வேண்டும், பட்டமங்கலத்தெரு ஒரு வழிப்பாதையாக  செயல்படும் என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai