சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, செப். 28-ஆம் தேதி நடைபெறவிருந்த நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப். 23-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்தக் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் செப். 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    இந்நிலையில், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், செப். 28-ஆம் தேதி நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai