சுடச்சுட

  

  வெளிநாட்டில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவரை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.
  தரங்கம்பாடி அருகேயுள்ள மில்லத்தூர் வடகரையைச் சேர்ந்த ஜாபர் அலி, நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமியிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
  எனது மகன் முஹம்மது சலீம் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் மீண்டும் ஏப். 2 ஆம் தேதி குவைத் புறப்பட்டார். அதற்காக சென்னை விமான நிலையம் சென்றவரிடம், ஒரு பெண் சிறிய பார்சலை கொடுத்து குவைத்தில் உள்ள தனது கணவரிடம் சேர்க்கும்படி கூறியுள்ளார். ஆனால், குவைத் விமான நிலையத்தில் பார்சலை சோதனை செய்தபோது, அதில் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சலீம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  சென்னை விமான நிலைய கண்காணிப்புக் கேமராவில் அப்பெண் தொடர்பான ஆதாரங்கள் இருக்கக் கூடும். எனவே, அதை ஆராய்ந்து அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குவைத்தில் உள்ள எனது மகனை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai