சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து சீர்காழியில் கருப்புக்கொடி, தர்னா போராட்டம்

    By DIN  |   Published on : 28th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி நகராட்சி 2-ஆவது வார்டு பகுதியில் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக கூறி, சிலர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, தர்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

    சீர்காழி நகராட்சி 2-ஆவது வார்டுக்குள்பட்ட கோவிந்தராஜன் நகர், அருந்ததிநகர், கே.பி.எஸ்.மணி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் செய்துகொடுக்கவில்லை என அப்பகுதிகளைச் சேர்ந்த சிலர், வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டினர். மேலும், கருப்புக் கொடியுடன் சாலையில் பந்தல் அமைத்து, 50-க்கும் மேற்பட்டவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இப்போராட்டத்தில் ஈடுபட்ட பூங்குழலி என்பவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் இக்குறைகளைப் போக்க முனைப்பு காட்டவில்லை. ஆகையால் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
    தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி, நகர்மன்றத் தலைவர் ஜெ.இறைஎழில், நகராட்சி ஆணையர் (பொ)ஆனந்தராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர், தெருவிளக்கு, குப்பைத்தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், சாலை வசதி தேர்தலுக்குப் பிறகு செய்துதரப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai