சுடச்சுட

  

  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
  நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளின் ஒதுக்கீடு விவரம்: அரிவளூர், கோடிமங்கலம், நக்கம்பாடி, பாலையூர், பேராவூர், சிவனாகரம்,  திருவாலங்காடு மற்றும் வழுவூர் ஆகிய ஊராட்சிகள் தாழ்த்தப்பட்டோர்  பெண்கள் பிரிவுக்கும், எழுமகளூர், மாதிரிமங்கலம், மாந்தை, மங்கநல்லூர், பெருமாள்கோவில், பெருஞ்சேரி, சேத்திரபாலபுரம், தத்தங்குடி ஆகிய ஊராட்சிகள் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலங்குடி, அனந்தநல்லூர், அசிக்காடு, இடக்குடி, கங்காதரபுரம், தேரழந்தூர், கொடவிளாகம், கொக்கூர், கோமல், கோனேரிராஜபுரம், கொத்தங்குடி, மருத்தூர், முத்தூர், சென்னியநல்லூர், திருவாவடுதுறை, வானதிராஜபுரம்,  வில்லியநல்லூர் ஆகிய ஊராட்சிகள் பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  கடக்கம், கடலங்குடி, காஞ்சிவாய், கப்பூர், கருப்பூர், கழனிவாசல், கிளியனூர்,  கொழையூர், மேக்கிரிமங்கலம், மேலையூர், பழையகூடலூர், பண்டாரவாடை, பருத்திக்குடி, பெரம்பூர், பொரும்பூர், சேத்தூர், திருமணஞ்சேரி, தொழுதாலங்குடி ஆகிய ஊராட்சிகள் பொதுப் பிரிவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  குத்தாலம் பேரூராட்சியில் 1, 5, 6, 7, 9, 11, 16 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவாகவும், 2, 3, 8, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவு பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவுக்கு 4-ஆவது வார்டும், தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கு 10-ஆவது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai