சுடச்சுட

  

  தானியக் கிடங்கு கட்டுமானப் பணிக்கு நிலத்தடி நீர் எடுக்க எதிர்ப்பு

  By DIN  |   Published on : 28th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேதாரண்யம் அருகே அமைக்கப்பட்டு வரும் அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிக்கு,  நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனங்களை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறிக்க முயன்றனர்.
  வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் ரூ.144 கோடியில் அரசின் உணவு தானிய கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் நிலத்தடி நீரில் உப்பின் தன்மை அதிகமாக இருப்பதால், கட்டுமானப் பணிக்கான தண்ணீர் வேறு இடத்தில் இருந்து எடுத்துவரப்பட்டது.
  இதற்காக, கோவில்பத்து கிராமத்தில் நிலத்தடி நீர் எடுக்க கடந்த மாதத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பக்கத்து கிராமமான வெள்ளப்பள்ளத்தில் தனியார் இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்தனர். இங்கிருந்து நாள்தோறும் சுமார் 20 டேங்கர்களில் தண்ணீர் எடுக்கப்பட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  இதைக்கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
  இந்த நிலையில், வெள்ளப்பள்ளம் கடைவீதியில் கூடிய பொதுமக்கள் தண்ணீர் டேங்கர் வாகனங்களை மறிக்க முயன்றனர். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.பாலு தலைமையிலான போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்தனர்.
  மேலும், தண்ணீர் எடுப்பதை தாற்காலிகமாக நிறுத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai