சுடச்சுட

  

  நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை விருப்ப மனு

  By DIN  |   Published on : 28th September 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், வேதாரண்யத்தில் வியாழக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என மக்களவை முன்னாள் உறுப்பினரும், நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.வி.ராசேந்திரன் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: நாகை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாகை,கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம்.
  வேதாரண்யம் பயணியர் மாளிகையில் வியாழக்கிழமை(செப்.29) காலை 10 மணியளவில் விரும்ப மனுக்கள் பெறப்படும். இந்த முகாமில், மாநில கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள, நாகை மாவட்டத் தலைவர் பி.வி.ராசேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சிங்காரம், முன்னாள் எம்.பி, பி.பி கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் மன்னை.மதியழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மனுக்களைப் பெறுகின்றனர்.
  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.500-ம் மனுவுடன் செலுத்தவேண்டும். இதில், பெண்கள் மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. வகுப்பினராக இருந்தால் 50 சதவீத கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றார் பி.வி.ராசேந்திரன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai